யாழ்ப்பாணத்தில் துயர சம்பவம்: பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு!
யாழில் வீதியை கடக்க முயன்றவேளை மோட்டார் சைக்கிள் மோதி வயோதிபப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்றைய தினம் (11-08-2023) பிற்பகல் பருத்தித்துறை வீதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த பெண் நேற்று முன்தினம் (10-08-2023) கோப்பாய் தெற்கு பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு செல்வதற்காக, பருத்தித்துறை வீதியை குறுக்கே கடந்தார்.
இதன்போது அவ்வழியே வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் படுகாயமடைந்த பெண் சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று பிற்பகல் உயிரிழந்துள்ளார்.
மேலும் குறித்த விபத்தில் கோப்பாய் தெற்கு பகுதியைச் சேர்ந்த 68 வயதான நாகராஜா இராஜபூவதி என்ற வயோதிப பெண்ணே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.