புத்தளத்தில் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்: பரிதாபமாக உயிரிழந்த பெண்
புத்தளம் - கொழும்பு பிரதான வீதியின் ரத்மல்யா பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் வயோதிப பெண்ணொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து சம்பவம் இன்று (22-01-2023) காலை இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்து தொடர்பில் மேலும் தொரியவருவது,
கற்பிட்டியிலிருந்து புத்தளம் நோக்கிச் சென்ற தனியார் பஸ்ஸொன்றில் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
புத்தளம் ரத்மல்யா பகுதியில் பஸ்ஸை நிறுத்துமாறு கூறி பஸ்ஸில் ஏறுவதற்கு வீதியைக் கடக்க முற்பட்ட போதே குறித்த பஸ் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கற்பிட்டி ஏத்தாலை ஆலங்குடா பகுதியைச் சேர்ந்த 71 வயதுடைய சாஹிபு பகீர் மயிமுந்நாச்சியா என்ற வயோதிப் பெண்ணொருவரே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் பிரேத அரையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளைப் புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.