யாழில் பரிதாபமாக உயிரிழந்த பெண்! சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்
யாழ் காரைநகர் பகுதியில் வசிக்கும் வயோதிபப் பெண் ஒருவர் குளவி கொட்டுக்கு இலக்காகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்றைய தினம் (12-08-2023) காரைநகர் - களபூமியில் காலை வேளையில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த பெண் நேற்று காலை 6.30. மணிக்கு காரைநகர் - களபூமியில் உள்ள ஆலயத்திற்கு துப்பரவு வேலைக்காக சென்று, துப்பரவு பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தவேளை குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளார்.
இதனையடுத்து அவரை வலந்தலை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்றைய தினம் அதிகாலை வேளை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
மேலும் இச்சம்பவத்தில் காரைநகர் - களபூமியைச் சேர்ந்த 63 வயதான கிருஷ்ணபிள்ளை சிவபாக்கியம் என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.