தமிழர் பகுதியில் காட்டு மிராண்டித்தனமாக தாக்கப்பட்ட பெண்; நடந்தது என்ன?
முல்லைத்தீவில் நேற்றையதினம் (2) ஒரு இளம் பெண்ணை வீதியில் வைத்து பலர் முன்னிலையில் ஒரு ஆண் மிக மூர்க்கமாக கொட்டான் தடி ஒன்றினால் தாக்கும் காணொளி சமூகவலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவத்தில் DASH கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தில் கண்ணிவெடி அகற்றும் பணியாளராக பணிபுரியும் பெண் ஒருவரே தாக்குதலுக்கு உள்ளாகி இருந்ததாக கூறப்படுகின்றது.
கண்ணிவெடி அகற்றும் பணியாளராக பணிபுரியும் பெண்
குறித்த கடமை முடித்து வீட்டுக்கு வரும் போதே பேருந்திலிருந்து இறங்கிய வேளை வீதியில் வைத்து இளைஞர் ஒருவர் பெண்ணின் முடியை பிடித்து காட்டுமிராண்டித்தனமாக தாக்கியுள்ளார் .
தாக்குதலை மேற்கொண்ட நபர் முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவில் உள்ள சின்னசாளம்பன் கிராமத்தில் வசிப்பவர் என கூறப்படுகின்றது.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் உடனடி விசாரணைகளை மேற்கொள்வதோடு பெண்களுக்கு எதிரான அனைத்து வன்முறைகளும் ஒழிக்கப்படவேண்டும் எனவும் சமூக ஆர்வலகள் கோரிக்கை விடுத்துள்ளனர் .