ஆபத்தான நீர்வாழ் உயிரினங்களை கடத்திய பெண் உட்பட மூவர் கைது
சுற்றுச்சூழல் அமைப்பைப் பாதிக்கக்கூடிய 3,500 க்கும் மேற்பட்ட நீர்வாழ் உயிரினங்களை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வர முயன்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுங்க திணைக்கள நீர்வாழ் உயிரினங்களின் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சோதனையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்கள் தாய்லாந்தில் இருந்து சிறிலங்கன் விமான சேவை மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்ததாக தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட பெண்ணும் இரண்டு ஆண்களும் வெயாங்கொட பகுதியில் மீன் வளர்ப்பு தொழில் ஈடுபடுபவர்கள் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
சிவப்புச் செவியுள்ள ஆமைகள் , சிவப்பு வால் கொண்ட மீன்கள் , முதலை போன்ற வடிவம் கொண்ட மீன்கள் , பல வகை நத்தைகள் மற்றும் பன்றி மூக்கு போன்ற மூக்கினை கொண்ட ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
விசாரணைகளின் பின்னர் இந்த நீர்வாழ் உயிரினங்களை மீண்டும் தாய்லாந்திற்கு திருப்பி அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.