வளர்ப்பு மகளை கழுத்தை நெரித்து கொன்ற பெண் கைது
வளர்ப்பு மகளைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம் ஒன்று இந்தியாவின் பீகார் மாநிலத்தில் பதிவாகியுள்ளது.
இந்த சம்பவத்தில் 8 வயதுடைய பெண் பிள்ளை ஒருவரே உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நேற்றைய தினம் சிறுமி காணாமல் போயிருந்த நிலையில் அவரது குடும்பத்தினர் காவல்நிலையத்தில் முறைப்பாடளித்தனர்.
முறைப்பாட்டைத் தொடர்ந்து காவல்துறையினர் சிறுமியின் சித்தியான வளர்ப்புத் தாயின் வீட்டில் சோதனையை முன்னெடுத்தனர்.
இதன் போது சிறுமியின் உடல் கருகிய நிலையில் மீட்க்கப்பட்டுள்ளது. மீட்க்கப்பட்ட உடல் பிரேதப் பரிசோதனைக்காக அருகில் உள்ள வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
பின்னர் சிறுமியின் சித்தியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சிறுமியைத் தாமே கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.
இதனையடுத்து குறித்த பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார்.