பிரபல முருகன் ஆலயத்தில் இடம்பெற்ற மோசமான சம்பவம்; பெண் கைது
மட்டக்களப்பு மண்டூர் முருகன் ஆலயத்தில் பெண் ஒருவரின் 20 ஆயிரம் ரூபா பணத்துடன் இருந்த பணப்பையை திருடிய பெண் ஒருவரை ஞாயிற்றுக்கிழமை (31) கைது செய்துள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
வரலாற்று பிரசித்தி பெற்ற மண்டூர் முருகன் ஆலைய வருடாந்த உற்சவம் இடம்பெற்று வருகின்றது.
மேலதிகமாக 65 ஆயிரம் ரூபா
இந் நிலையில் பாதுகாப்பு கடைமைகளில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்த பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் பணப்பையை திருடிய பெண் ஒருவரை ஆலய பகுதியில் வைத்து மடக்கி பிடித்து கைது செய்தனர்.
இதன் போது திருட்டுப்போன கைப்பையும் அதில் இருந்து 20 ஆயிரம் ரூபா பணத்தை பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன், திருட்டில் ஈடுபட்ட பெண்ணிடம் இருந்து மேலதிகமாக 65 ஆயிரம் ரூபா பணத்தையும் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் 39 வயதுடைய பெரிய போரதீவு பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் திருட்டு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.