தொடரும் வேட்டை; மனித கடத்தலில் ஈடுபட்ட பெண் கைது
ஓமானுக்கு மனித கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.
சந்தேகநபரான குறித்த பெண் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் இன்று (21) காலை சரணடைந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
45 வயதுடைய துணை முகவர்
இந்த கடத்தலில் ஈடுபட்ட 45 வயதுடைய துணை முகவர், அவிசாவளை பகுதியில் வர்த்தக, ஆட்கடத்தல் மற்றும் கடல்சார் குற்ற விசாரணைப் பிரிவினரால் நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டார்.
மேலும், ஓமன் மற்றும் டுபாயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மனித கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் இந்தக் கடத்தலின் பிரதான சந்தேக நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.