மட்டக்களப்பில் பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய பெண் உட்பட இருவருக்கு நேர்ந்த கதி!
மட்டக்களப்பு - ஏறாவூர், மீராங்கேணி பகுதியில் போதைபொருள் வியாபாரி ஒருவரை கைது செய்யும் நடவடிக்கைக்கு இடையூறு விளைவித்த பெண் உட்பட இருவரை பொலிஸ் கைது செய்துள்ளனர்.
குறித்த நடவடிக்கை நேற்றிரவு (28-10-2024) மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ஏறாவூர் - மீராங்கேணி பகுதியில் 11,230 மில்லிகிராம் ஹெரோயின் போதைபொருளுடன் வியாபாரி ஒருவரை கைது செய்ய முற்பட்ட வேளை பொலிஸாரை கடமையை செய்யவிடாது அவர்கள் மீது தாக்குதலில் பெண் ஒருவர் உட்பட இருவர் ஈடுபட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் சம்பவதினமான நேற்றிரவு முற்றுகையிட்ட பொலிஸார் போதைபொருள் வியாபாரி ஒருவரை 11230 மில்லிகிராம் ஹரோயின் போதை பொருளுடன் கைது செய்துள்ளனர்.
பொலிஸார் தமது கடமையை செய்யவிடாது பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொண்ட 36 வயதுடைய பெண் ஒருவரையும் 24 வயதுடைய இளைஞன் ஒருவரையும் போதைபொருள் வியாபாரி உட்பட 3 பேரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முன்னிலைபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.