CIDயினரால் கைது செய்யப்பட்ட பெண் ; அலுமாரிக்குள் காத்திருந்த அதிர்ச்சி
தெஹிவளையில் 5இலட்சம் ரூபாவுக்கும் அதிக மதிப்புள்ள 5,000க்கும் மேற்பட்ட போதை மாத்திரைகளுடன் 31 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டதாக கல்கிசை குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தச் சோதனையின் போது சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகத்தில் இருந்து சம்பாதித்ததாக நம்பப்படும் ரூ.134,000ரூபா பணமும் பறிமுதல் செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
போதைப்பொருள் வர்த்தகம்
குறித்தசந்தேக நபர், போதை மாத்திரைகளை விற்பனை செய்ததாக வந்த புகாரைத் தொடர்ந்து. அவரது வீட்டை சோதனைக்குட்படுத்திய போது அலுமாரிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதை மாத்திரைகளை மீட்டதோடு குறித்த சந்தேக நபரையும் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை ஹெரோயின் வைத்திருந்தது தொடர்பாக அந்தப் பெண் முன்பு கைது செய்யப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அத்தோடு சந்தேகநபரை கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.