கோபமாக அழைப்பை எடுத்த கோட்டாபய: இரு முறை வாய் திறந்த வீரவன்ச
விமல் வீரவன்சவிற்கு (Wimal Weerawansa) ஒரு நாள் பகல் 2.01 மணியளவில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) அழைப்பு ஒன்றை எடுத்தாகவும், அப்போது ஒவ் (ஆம்) ஜனாதிபதித்துமனி என்றேன் என அவர் கூறினர்.
அதன்போது, வீட்டில் முக்கியமான கூட்டமொன்று நடைபெற்றுக்கொண்டிருந்தது. அதாவது, ஆசிரியர் சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்கான குழுவின் கூட்டமாகும். அதில், அமைச்சர்களான மஹிந்த அமரவீர, டலஸ் அழகபெரும ஆகியோர் இருந்தனர்.
அப்போது அழைப்பு எடுத்த ஜனாதிபதி, என்ன நீங்கள் நாட்டை மூடுமாறு கூறுகின்றீர்கள் என ஏதேதோ கூறிக்கொண்டே போனார். பதவியை இராஜினாமா செய்வதற்கான கடிதத்தை அனுப்புமாறு கோரினார். நான், நன்றி ஜனாதிபதித்துமனி என்றேன்.
அன்றையதினம் ஜனாதிபதியிடம் இரண்டே வார்த்தைகள்தான் பேசினேன். ஒவ் ஜனாதிபதித்துமனி, ஸ்தூத்தி (நன்றி) ஜனாதிபதித்துமனி
அதற்குப்பின்னர் உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்காரருக்கும் ஜனாதிபதி, அழைப்பை எடுத்திருந்தார். எனினும், இராஜினாமா கடிதத்தை கோரவில்லை என விமல் வீரவன்ச தெரிவித்தார்.
இது தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ (Mahinda Rajapaksa) கேள்விப்பட்டு எனக்கு அழைப்பை எடுத்திருந்தார். நான் சொன்னேன், இராஜினாமா கடிதத்தை எழுதிக்கொண்டிருக்கின்றேன் என்று, ஒவ்வொருவர் கூறுவதைப்போல செயற்படவேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார்.
அந்தக் காலப்பகுதியில் கொரோனா தொற்றின் காரணமாக, இரண்டொரு வாரங்களுக்கு நாட்டை முற்றாக முடக்குமாறு நாங்கள் கோரியிருந்தோம். எனினும், சுமார் ஒரு மாதத்துக்கு மேலாக நாடு மூடப்பட்டிருந்தது என்றும் விமல் வீரவன்ச தெரிவித்தார்.