இறக்குமதி செய்யப்பட்ட புதிய வாகனங்களின் விலையில் வீழ்ச்சி ஏற்படுமா ?
இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் விற்பனையாகாமல் தேங்கி இருப்பதாக வெளியான தகவலை, வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் நிராகரித்துள்ளது.
அதேநேரம், வெளிநாட்டு நாணயப் பெறுமதியில் நிலவுகின்ற தளம்பல் நிலை காரணமாக, வாகனங்களின் விலையில் வீழ்ச்சி ஏற்படுமா? என்பதைச் சரியாகக் கணிக்க முடியாதிருப்பதாகவும், வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே குறிப்பிட்டுள்ளார்.
தளம்பல் நிலை
அத்துடன், நாட்டுக்கு வாகன வரத்தில் பற்றாக்குறை இல்லை என, வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே தெரிவித்துள்ளார்.
கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகங்கள் ஊடாக இதுவரையில் 7000 புதிய வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. புதிய வாகனங்களுக்கு அதிக கிராக்கி நிலவுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டதன் பின்னர், இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களில் 75 சதவீதமானவை இதுவரையில் விற்பனையாகி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.