இந்தியா கண் சொட்டு மருந்து கறுப்பு பட்டியலில் சேர்க்கப்படுமா?
இலங்கையில் கண் சத்திரசிகிச்சைக்குப் பின்னர் பயன்படுத்தப்படும் இந்தியாவின் ப்ரெட்னிசோலோன் என்ற கண் சொட்டு மருந்தை கறுப்பு பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சு இன்று தெரிவித்துள்ளது.
முன்னதாக, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ப்ரெட்னிசோலோன் கண் சொட்டு மருந்து (Prednisolone Eye Drops) பல சிக்கல்கள் பதிவாகியது.
ஆய்வக சோதனைகள்
இதையடுத்து, உடன் அமுலுக்கு வரும் வகையில் பயன்படுத்துவதை நிறுத்துமாறு அனைத்து மருத்துவமனை பணிப்பாளர்களுக்கும் சுகாதார அமைச்சு அறிவித்தது.
அது தொடர்பில் நடத்தப்பட்ட ஆய்வக சோதனைகள் இந்த கண் சொட்டு மருந்து மாசுபட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளரான வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்தார்.
அதோடு குறித்த மருந்துப் பொருட்கள் தொடர்பான கொடுப்பனவுகளை செலுத்தாமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட Prednisolone Eye Dropsக்குப் பதிலாக மியன்மாரில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மருந்தைப் பயன்படுத்தப்பட உள்ள நிலையில் கண் சத்திரசிகிச்சைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.