பிக்பாஸில் வைல்டு கார்ட் என்ட்ரியாக வரப்போவது இவரா? அவரே வெளியிட்ட தகவல்
தமிழகத்தில் பிரபல தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ்.
இந்த நிகழ்ச்சியின் 5 சீசன்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற நிலையில் அதன் 6 சீசன் தற்போது 10 வாரத்தை கடந்து வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது.
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்கள் கலந்துகொண்ட நிலையில் கடந்த வாரம் இலங்கைப் பெண் ஜனனி வெளியேறிருந்த நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டில் 10 போட்டியாளர்கள் மட்டுமே விளையாடி வருகின்றனர்.
இவ்வாறான நிலையில் இந்த சீசனில் போட்டியாளராக யூடியூப் பிரபலம் ஜி.பி.முத்து முதல் வாரத்திலேயே தனிப்பட காரணத்திற்காக வெளியேறி இருந்தார். இந்த நிலையில் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்கு செல்வது குறித்து ஜி.பி பேசியுள்ளார்.
விஜய் டிவியின் புதிய சேனலான விஜய் டக்கர் சேனலின் நிகழ்வில் கலந்து கொண்ட ஜி. பி. முத்து பிரத்யேகமான பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
அதில் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்கு வைல்டு கார்டு மூலம் செல்வீர்களா? என அதில் கேள்வி கேட்கப்பட்டது.
இருப்பினும் இதற்கு பதிலளித்த முத்து, "கண்டிப்பாக அப்படி கூப்பிட்டா.. இதுவரை கூப்பிடலை, கூப்பிட்டா பாப்போம்" என ஜி.பி. முத்து பதில் அளித்துள்ளார்.