புத்தளத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த காட்டுயானை சடலமாக மீட்பு!
புத்தளம் கொட்டுக்கச்சி புறானகம பகுதியில் காயங்களுக்கு உள்ளான நிலையில் காட்டு யானையொன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த காட்டு யானை இன்று (09-02-2023) பிற்பகல் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
குறித்த யானை துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் உயிரிழந்திருக்கலாமென வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சந்தேகிப்பதாகத் தெரிவித்தனர்.
உயிரிழந்த காட்டு யானை சுமார் 40 வயது எனவும் 7 அடி 8 உயரமென மதிக்கப்பட்டுள்ளதாகவும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
உயிரிழந்த யானைக்கு மிருக வைத்தியர் இசுரு என்பவரினால் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாக புத்தளம் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் இதன்போது தெரிவித்தனர்.