ஜனாதிபதிக்கு மூன்று முக்கிய அறிவுரைகளை சொன்ன விக்கி!
இலங்கையில் உண்மையான நல்லிணக்கம் உருவாக வேண்டுமென்றால் முதலில் மூன்று முக்கிய விடயங்களை செய்யுங்கள் என ஜனாதிபதிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் (C. V. Wigneswaran) தெரிவித்துள்ளார்.
நாட்டில் இன நல்லிணக்கத்தை உருவாக்கி சாந்தியும் சமாதானமும் உருவாக ஜனாதிபதி கோட்டாபய (Gotabaya Rajapaksa) மற்றும் அவரின் அரசாங்கமும் உண்மையாக உழைக்க விரும்புகின்றார்கள் என்றால் முதலில் பின்வருவனவற்றை அவர்கள் செய்யமென மூன்று முக்கிய அறிவுரைகளை நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்கினேஸ்வரன் தனது உரையில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தொல்பொருள் திணைக்களம், வனவளத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் பல திணைக்களங்கள் தற்போது வடக்கு கிழக்கில் நடத்தி வருகின்ற இன கலாச்சார அழிப்பின் மூலம் வடக்கு கிழக்கு மாகாணங்களின் இனப் பரம்பலை மாற்றி புதிய வரலாற்றை பிறழ்வாக எழுத எத்தனிக்கும் செயற்பாடுகளை உடனே நிறுத்த வேண்டும்.
இதேவேளை, நாட்டில் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய்ய வேண்டும்.
இவ்வாறான, உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்த ஜனாதிபதி கோட்டாபயவுக்கு மனமிருந்தால் மேற்கண்ட மூன்று விடயங்களையும் உடனே செய்ய வேண்டும். அதன் பின்னர் தான் புதிய தொரு சமஷ்டி அரசியல் யாப்பை எமது ஜனநாயக சோஷலிச குடியரசுக்காக வரைய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.