கணவரின் பிறப்புறுப்பை அறுத்த மனைவி ; பதற வைக்கும் பகீர் பின்னணி
அசாம் மாநிலத்தில் வேறொரு பெண்ணுடன் தொடர்பிலிருந்த கணவனின் பிறப்புறுப்பை மனைவி துண்டித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மாநிலம் நகன் மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதியர்கோவை கணபதி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

கணவருக்கு சிகிச்சை
இந்நிலையில் குறித்த பெண்ணின் கணவருக்கு வடமாநில பெண்களுடன் தொடர்பு இருந்துள்ளமை தெரியவந்ததை அடுத்து குறித்த பெண் தனது கணவரை கண்டித்துள்ளார். எனினும் அவர் பெண்களுடன் இருந்த தொடர்பை கைவிடவில்லை .
சம்பவத்தன்று பெண்ணின் கணவர் வீட்டிற்கு இளம்பெண் ஒருவரை அழைத்து வந்து இருந்திருந்ததால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் ஆத்திரமடைந்த குறித்த பெண் மதுபோதையில் இருந்த கணவனின் பிறப்பு உறுப்பை அறுத்து வீசி, கணவரை அறையில் வைத்து பூட்டிவிட்டு, தப்பியோடியுள்ளார்.
அறையில் இருந்து வெளியே வரமுடியாத கணவர் கத்தி கூச்சல் போட்டு அருகில் வசிப்பவர்களை உதவிக்கு அழைத்ததுடன் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.