கணவருக்கு மனைவி நிகழ்த்திய கொடூரம் ; இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள வார்ப்பட்டு ஊராட்சி தேவன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி. இவரது மனைவி இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதேபோல் நேற்று மது குடித்து விட்டு கணவர் வீட்டுக்கு வந்தார்.

வழக்குப்பதிவு
பின்னர் மனைவி அழகு மீனாவுடன் தகராறில் ஈடுபட்டு அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் ஆத்திரம் அடைந்த அழகு மீனா தனது கணவர் கீழே தள்ளி அருகே கிடந்த இரும்பு கம்பியால் சரமாரியாக அடித்தார். இதில் அவர் படுகாயம் அடைந்தார்.
இருப்பினும் ஆத்திரம் தீராத மனைவி அங்கிருந்த நைலான் கயிற்றால் அவரது கழுத்தை நெரித்தார். இதில் ராஜா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
கனமழையால் சாலைகள் சேதமடைந்ததாக பரவும் வதந்தி- கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் தயக்கமின்றி வரலாம் இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ராஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் இந்த கொலை தொடர்பாக அவர்களது 2 மகன்களிடம் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.