பிரபல ரப் பாடகரை கொடூரமாக கொன்ற மனைவி: விசாரணையில் ஏற்பட்ட திருப்பம்!
ரப் பாடகரான தனது கணவனை கொன்றதாக பொலிஸார் அவரது மனைவியை கைதுசெய்த நிலையில் குறித்த கொலை தொடர்பில் சாட்சியங்களை நிரூபிக்க முடியாமல் போனதால் குறித்த பெண்ணை நீதிமன்றம் பிணையில் விடுதலை செய்துள்ளது.
மேலும் அந்த பெண், சாட்சியங்களின்றி நூதனமாக அவர் இந்த சம்பவத்தை அரங்கேற்றியதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
ரப் பாடகரான தனது கணவனை கொன்று, சடலத்துடன் உடலுறவு கொண்டு அவரது உடல் உறுப்புக்களை சிதைத்து இரத்தம் குடித்ததாக பொலிஸார் குறித்த பெண் மீது குற்றம் சாட்டியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கொலை சம்பவம் கடந்த ஆண்டு ஒகஸ்ட் மாதம் ரஷ்யாவின், சென்.பீட்டர்ஸ்பேர்க்கில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து தெரியவருவது,
உக்ரேனை சேர்ந்த அலெக்சாண்டர் யுஷ்கோ ( Alexander Yushko) என்பவர் ஆண்டி கார்ட்ரைட் (Andy Cartwright) என்ற பெயரில் ரப் பாடகராக விளங்கினார். இவர் ரஷ்யாவில் அவர் வசித்து வந்துள்ளார்.
அவர் 2020 ஆண்டு ஓகஸ்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு, உடல் பாகங்கள் குளிர்தானப்பெட்டியில் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிசார் மீட்டனர்.

இச்சம்பவம் தொடர்பில் 37 வயதான அவரது மனைவி மெரினா கோகலை (Marina Kukhal) பொலிஸாரால் கைது செய்தனர். இறந்த கணவரின் இரத்தத்தை குடித்து, அவரது சடலத்துடன் உடலுறவு கொண்டதாக துப்பறியும் நபர்களால் முதலில் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இந்த கொலை சம்பவத்தில் அவர்ஹ்டு மனைவி மெரினா கோகல் முக்கிய சந்தேக நபராக இருந்தாலும், ரஷ்யாவின் சிறந்த தடயவியல் விஞ்ஞானிகள், அவர் தனது அம்மா எலினா கோகல் (68) உடன் கூட்டு சேர்ந்து கணவருக்கு விஷம் கொடுத்தார் என குற்றம்சாட்டப்பட்டார். நீரிழிவு நோயாளிகளுக்காக வடிவமைக்கப்பட்ட இன்சுலின் மாற்றீட்டை வாங்கியதாகவும், பின்னர் உக்ரேனிய ராப்பருக்கு அதிக அளவு மருந்தை வழங்கியதாகவும் கூறுகின்றனர்.
ஆண்டி கார்ட்ரைட் (Andy Cartwright) உயிரிழக்கும் நேரத்தில், கவர்ச்சியான ரசிகர் நதியா ரோமானென்கோ என்ற 25 யுவதியுடன் உறவு கொண்டிருந்தாக மனைவி சந்தேகப்பட்டுள்ளார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் மனைவி மெரினா கோகல் (Marina Kukhal) தனது தாயுடன் சேர்ந்து கணவனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில், குற்றவியல் புலனாய்வாளர்கள், “குற்றம் சாட்டப்பட்டவர்களால் கொலை திட்டமிடப்பட்டது என்பதற்கான” ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாகக் கூறுகின்றனர். ஆனால் அவர் உண்மையில் அதைச் செய்தார் என்பதற்கான ஆதாரம் இல்லாததை ஒப்புக்கொண்டுள்ளனர்.
மெரினா கோகல் (Marina Kukhal) ஒரு கத்தியால் சடலத்தை துண்டித்ததை ஒப்புக்கொண்டார். ஆனால், புகழ்பெற்ற பாடகர், அளவிற்கதிகமான போதைப்பொருள் பாவனையால் இறந்தார் என்பதை அவரது ரசிகர்கள் அறியக்கூடாது என்பதற்காக அவர் இதைச் செய்ததாக கூறியுள்ளார்.
ஆண்டி கார்ட்ரைட்டின் (Andy Cartwright) உடல் பாகங்கள் குளிர்சாதனப்பெட்டியில் மீட்கப்பட்டன. கணவனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்ததும், கணவனின் சடலத்துடன் உடலுறவு கொண்டதாகவும், கணவரின் உடலை பல துண்டுகளாக வெட்டி ரத்தம் குடித்ததாகவும் அவர் மீது பொலிஸாரால் குற்றஞ்சாட்டப்பட்டது.
மேலும் இச்சம்பவத்திற்கு துணையாக இருந்த மெரினாவின் தாய் எலெனாவையும் பொலிஸார் கைது செய்தனர். இதேவேளை ஆண்டி கார்ட்ரைட்டின் விரல் நுனிகள் வெட்டி வெளியே முற்றத்தில் உள்ள எலிகளுக்கு உணவளிக்கப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இருவரும் சிறையில் இருந்து வெளிவந்த நிலையில், பிணை கோரி மெரினா கோகல் (Marina Kukhal) நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மெரினா கணவனை கொலை செய்ததான சரியான ஆதாரங்கள் இல்லாததால் அவருக்கு நீதிமன்றம் நிபந்தனை பிணை வழங்கியுள்ளது.
ஒரு வருடம் சிறையிலிருந்த பின் அவர் வீட்டுக்காவலிற்கு மாற்றப்பட்டுள்ளார். 4 வயதான அவரது மகனுடன் இணைக்கவும் நீதிமன்றம் அனுமதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.