கணவனுக்கு தெரியாமல் மனைவி செய்த கொடூர செயல்... நிதீமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு!
கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் 7 வாரங்களே ஆன கருவை கணவருக்கு தெரிவிக்காமல் கலைத்த சம்பவம் தொடர்பில் குடும்ப பெண்ணை தெமட்டகொட பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்ட பெண்ணை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் திருமதி பவித்ரா சஞ்சீவனி பத்திராஜா உத்தரவிட்டுள்ளார்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் அனைவரையும் உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் பண்டார இளங்கசிங்க கடந்த 10ஆம் திகதி வழங்கிய உத்தரவின் அடிப்படையில் சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கொழும்பு 14, மாதம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் தாக்கல் செய்த முறைப்பாட்டையடுத்து, சந்தேக நபரான பெண் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கருக்கலைப்பு செய்ததாகக் கூறப்படும் வைத்தியரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.
தனக்கு தெரிவிக்காமல் 7 வாரங்கள் 4 நாட்கள் நிறைவடையாத பெண் சிசுவை கலைத்ததாக, யாரோ மூலம் தெரியவந்ததையடுத்து, கணவன் அது குறித்து தெமட்டகொட பொலிஸில் முறைப்பாடு செய்ததாகவும் சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்தார்.
முன்கூட்டிய கருவை சட்டவிரோதமாக அழிப்பது கொலைக் குற்ற நடவடிக்கை என்பதால், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான பெண் மற்றும் கருக்கலைப்பு செய்த வைத்தியர் உள்ளிட்ட சந்தேக நபர்களுக்கு தண்டனை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட தகவல்களை கருத்திற்கொண்ட நீதவான், சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதுடன் கருக்கலைப்பு செய்ததாக கூறப்படும் வைத்தியருக்கு எதிராக தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தெமட்டகொட பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.