ஏன் பிறந்தேன்..? நீதிமன்றம் வந்த விசித்திர வழக்கு!
லண்டன் நீதிமன்றத்தில், எவீ டூம்ஸ் (வயது 20) என்ற இளம்பெண் ஒருவர் தன்னுடைய பிறப்புக்கு பிரசவம் பார்த்த மருத்துவரான பிலிப் மிட்செல் என்பவருக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த வழக்கில், மருத்துவர் பிலிப் தன்னுடைய தாயாருக்கு சரியான மருந்துகளை (போலிக் ஆசிட்) பரிந்துரைத்து இருந்தார் என்றால், கர்ப்பம் தள்ளி சென்று, தான் பிறந்திருக்காமல் இருந்திருப்பேன் என அப்பெண் தெரிவித்துள்ளார்.
எவீக்கு முதுகு பகுதியில் பாதிப்பு ஏற்பட்டு தனது வாழ்நாளில் டியூப் உதவியுடன் வாழ்ந்து வருகின்றார். இந்நிலையில் அவரது வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்ட நீதிபதி ரோசாலிண்ட் கோ, தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளார்.
அதாவது, எவீயின் தாயாருக்கு சரியான அறிவுறுத்தல்களை பிலிப் வழங்கியிருந்தால், கர்ப்பம் தள்ளி சென்றிருக்கும். அதன்பின்னர் கர்ப்பம் தரிக்கும்போது ஆரோக்கிமுள்ள குழந்தை பிறந்திருக்கும் என கூறிய நீதிபதி, எவீக்கு இழப்பீடாக பெருந்தொகையை கிடைப்பதற்கான உரிமை உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதேபோன்று, எவீயின் தாயார் நீதிமன்றத்தில் கூறும்போது, நல்ல முறையில் முன்பே சரிவிகித உணவு எடுத்திருந்தால், போலிக் ஆசிட் எடுத்து கொள்ள வேண்டாம் என மருத்துவரால் அறிவுறுத்தப்பட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் குறித்த விசித்திர வழக்கு பலருக்கும் ஆச்சர்யத்தினை ஏற்படுத்தியுள்ளது.