உண்மையில் நாமல் மற்றும் பெரமுன கட்சியின் பொதுச்செயலார் சுமந்திரனை சந்தித்தது எதற்காக?
வழக்கு விடயத்திற்காகவே நாமல் மற்றும் பெரமுன கட்சியின் பொதுச்செயலார் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரனை சந்தித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக சமூகவலைத்தள பதிவு ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
அதாவது முஸ்ஸீம் காங்கிரஸ் இருந்து கட்சியின் கொள்கைக்கும் தீர்மானத்திற்க்கும் முரனாக அரசாங்கத்திற்க்கு ஆதரவளித்த அகமட் அவர்களுக்கு , உயர்நீதிமன்றத்தில் , கட்சி வழக்கு தொடர்ந்த போது ,
முஸ்ஸீம் காங்கிரஸ் கட்சிக்காக ஆஜராகி நஸீர் அகமட்டின் அமைச்சர் பதவி , பாரளுமன்ற பதவியை இழக்க , வாதாடியவர் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுபோல கடந்த வாராம் சஜித் பிரமதாஸாவின் கட்சியைச் சேர்ந்த , ஹாரீஸ் , மற்றும் மனுஷநாணயக்கார அவர்களும் கட்சிக் கொள்கைக்கு மாறாக அரசாங்கத்திற்க்கு ஆதரவளித்த போது ,
அவர்களுக்கு எதிராக சஜித் கட்சினரால் தொடரப்பட்ட வழக்கில் , ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரனே ஆஜராகி மனுஷ , ஹாரீஸ் இருவரும் அமைச்சர் பதவி , மற்றும் பாரளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க , உயர்நீதிமன்றில் வாதாடியவர் சுமந்திரன் என்பது அனைவரும் அறிந்த விடயம்.
இந்தப் பின்னனியில் பொதுஜன பெரமுனவிலிருந்து சனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவுக்கு கட்சிக்கு முரனாக ஆதரவளிக்கும் 97 பாரளுமன்ற உறுப்பினர்களுக்கும் எதிராக , பெரமுன கட்சி சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் ஆஜராகி ,

வவுனியா இளம் குடும்பப் பெண்ணுக்கு பச்சை குத்திய விவகாரம்! நடந்தது என்ன? சுவிஸ் மாப்பிள்ளை எடுத்த முடிவு
அனைவரினதும் அமைச்சுப்பதவிகள் , பாரளுமன்ற உறுப்பினர் பதவிகளை இழக்க செய்ய , நாமல் - மஹிந்த தரப்புக்கள் விரும்பியதால் , அது தொடர்பான சட்ட வகுப்பை சுமந்திரனிடம் பெறவும் , அதற்காக சுமந்திரனை ஆஜராக வேண்டும் என ஒரு சட்டவறிஞர் என்ற அடிப்படையில் கோரிக்கை விடப்பட்டதாக தகவல் .
உண்மை என்பதனை பொறுத்திருந்தே பார்ப்போம். என சமூகவலைத்தளப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.