ஜனனி போனப்போ ஏன் பீல் பண்ணீங்க? அமுதவாணனை துளைத்தெடுத்த மனைவி!
மக்களின் பெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன், ஒளிபரப்பாகி வருகிறது.
சமீபத்தில் ஜனனி மற்றும் தனலட்சுமி உள்ளிட்ட போட்டியாளர்கள் வீட்டில் இருந்து வெளியேறி இருந்த நிலையில், தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் அசிம், விக்ரமன், மைனா, அமுதவாணன் உள்ளிட்ட 9 போட்டியாளர்கள் உள்ளே இருக்கின்றனர்.
இனி வரும் நாட்கள் மிக முக்கியமானவை என்பதால், அனைத்து போட்டியாளர்களும் இறுதி சுற்று வரை முன்னேற டாஸ்க்கில் சிறந்து விளங்க வேண்டும் என்ற கட்டாயத்திலும் உள்ளனர்.
இதனால், வரும் நாட்கள் விறுவிறுப்பு நிறைந்தவையாக இருக்கும் என்றும் பிக்பாஸ் பார்வையாளர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
போட்டியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி
இந்த வாரத்திற்காக Freeze Task எனப்படும் சுற்றில், போட்டியாளர்களின் குடும்பத்தினர் அனைவரும் பிக்பாஸ் வீட்டில் வருகை தருகின்றனர்.
மைனா நந்தினி, ஷிவின் உள்ளிட்ட பல போட்டியாளர்கள் தங்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் வருகையால் கண் கலங்கவும் செய்கின்றனர். மைனா நந்தினியின் கணவர் யோகேஷ் மற்றும் அவரது குழந்தை ஆகியோர் வருகை தந்திருந்தனர்.
இதே போல ஷிவினின் நண்பர்கள் அங்கே வந்திருந்தனர். அதேபோல அமுதவாணனின் மனைவி மற்றும் குழந்தைகள் ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்தனர்.
கணவர் அமுதவாணனை பார்த்ததும் அவரது மனைவி கட்டியணைத்து கண்ணீர் விட, மிகவும் எமோஷனலான தருணமாகவும் அது அமைந்திருந்தது.
அமுதவாணன் கவலை
இந்த நிலையில், ஜனனி மற்றும் தனலட்சுமி ஆகியோர் குறித்து அமுதவாணன் மற்றும் அவரது மனைவி பேசிக் கொண்டிருந்த விஷயம், தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
ஜனனி எப்போதும் டீ போட்டு தருவதை நினைத்து ஃபீல் செய்து அமுதவாணன், கொண்டிருக்கிறார். இதன்போது அமுதவாணன் மனைவி, "எங்களை நெனச்சு ஃபீல் பண்ணல, போனவங்கள நெனச்சு ஃபீல் பண்றியா?" என கேட்கிறார்.
இதற்கு விளக்கம் கொடுக்கும் அமுதவாணன், ஜனனி மற்றும் தனலட்சுமி ஆகியோரின் பெற்றோர்கள், Freeze டாஸ்க்கில் வருவதை அவர்கள் எதிர்பார்த்து இருந்ததாகவும் ஆனால் இரண்டு பேருக்கும் அது நடக்காமல் போனதாகவும் குறிப்பிட்டார்.
அப்போது ஜனனி வெளியே போனதற்காக ஏன் அதிகம் ஃபீல் செய்தீர்கள் என்று மீண்டும் அமுதவாணன் மனைவி விடாது கேட்க,
"என் கூட தான் அந்த பொண்ணு அதிகமா பேசிட்டு இருக்கும். என்கூட தான் நல்ல இதுவா இருக்கும் எல்லாமே. அப்படின்னு இருக்குறப்போ அவ போகும்போது, கடைசியில நீ நல்லா பண்ணம்மானு கூட சொல்லல" என அமுதவாணன் கவலையுடன் கூறியுள்ளார்.