யாழிற்கு வருகை தந்தும் செம்மணியை ஜனாதிபதி பார்வையிடாதது ஏன்?
பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க , உலகள்வில் பேசுபொருளாகியுள்ள செம்மணிக்கு செல்லாதது ஏன் என்ற கேள்வி தமிழ் மக்கள் மதில் எழுந்துள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு நடைபெறும் இடத்திற்கு விஜயம் செய்வார் என அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு தரப்பின்னராலும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க செம்மணி வீதியை கடந்து பயணித்த போதிலும், செம்மணி மனித புதைகுழியை சென்று பார்வையிடவில்லை.
இது தமிழர்கள் மனங்களில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
அதேவேளை செம்மணி அகழ்வு இடைநிறுத்தப்படமாட்டாது என்றும், செம்மணி தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்றும், நீதி பெற்றுக் கொடுக்கப்படும் என்றும் யாழில் ஜனாதிபதி உறுதி மொழி வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.