மரக்கறிகளின் மொத்த விலைகள் வீழ்ச்சி
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் மொத்த விலைகள் வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக விவசாயிகள் மற்றும் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளை கொள்வனவு செய்ய வர்த்தகர்கள் வராத காரணத்தினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களுடன் ஒப்பிடுகையில் மரக்கறிகளின் விலை வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், இதன்காரணமாக விவசாயிகள் உற்பத்திச் செலவை ஈடுகட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் உருளைக்கிழங்கு, சிவப்பு வெங்காயம், பெரிய வெங்காயம் போன்றவற்றின் விலைகள் குறைந்து வருவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் கடந்த ஜனவரி மாதம் மரக்கறிகளின் விலையும் மார்ச் மாத மரக்கறிகளின் மொத்த விற்பனை விலையும் இங்கே தரப்படுகின்றன.
காய்கறிகள் – ஜனவரி விலை – மார்ச் 23 விலை
பீன்ஸ் – ரூ. 300 / ரூ. 350 – ரூ. 80 / ரூ. 90
கேரட் – ரூ. 120 / ரூ. 130 – ரூ. 50 / ரூ. 60
கத்தரிக்காய் – ரூ. 390 / ரூ. 400 – ரூ. 80 / ரூ. 120
மிளகாய் – ரூ. 600 / ரூ. 650 – ரூ. 200 / ரூ. 250
சின்ன வெங்காயம் – ரூ. 620 / ரூ. 630 – ரூ. 250 / ரூ. 280
வெங்காயம் – ரூ. 165 / ரூ. 170 – ரூ. 90 / ரூ. 95
உருளைக்கிழங்கு வெளிநாட்டு – ரூ. 110 / ரூ. 120 – ரூ. 110 / ரூ. 120
உருளைக்கிழங்கு உள்ளூர் – ரூ. 200 / ரூ. 215 – ரூ. 110 / ரூ. 120
கறிமிளகாய் – ரூ. 1300 / ரூ. 1350 – ரூ. 1000 / ரூ. 1050
லீக்ஸ் – ரூ. 220 / ரூ. 230 – ரூ. 120/ ரூ. 150
சிறகவரை – ரூ. 110/ ரூ. 120 – ரூ. 50 / ரூ. 60
நூக்கல் – ரூ. 260 / ரூ.270 – ரூ. 70 / ரூ.80
புடலங்காய் – ரூ. 140/ ரூ. 150 – ரூ. 100 / ரூ. 110
பூசணி – ரூ. 110 / ரூ. 130 – ரூ. 30 / ரூ. 35
கோவா – ரூ. 50 / ரூ. 90 – ரூ. 25 / ரூ. 30
தக்காளி – ரூ. 80 / ரூ. 100 – ரூ. 120 / ரூ. 130