மோட்டார் சைக்கிள்களில் வந்த ஆயுதபாணிகள் யார்? சபையில் சஜித் கேள்வி
மக்கள் போராட்டத்தில் இலக்கத்தகடு இல்லாத மோட்டார் சைக்கிள்களில் வந்த ஆயுதபாணிகள் யார் ? எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச , இன்று சபையில் கேள்வி எழுப்பினார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து மக்கள் நாடளாவிய ரீதியில் அமைதியான முறையில் போராட்டங்களை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இவ்வாறான நிலையில் மக்கள் அச்சுறுத்தும் முறையில் முகமூடி அணிந்து, சீருடை அணிந்து , இலக்கத்தகடுகள் இல்லாத மோட்டார்சைக்கிளில் வந்தவர்கள் யார் எனவும் சஜித் கேள்வி எழுப்பினார். இது ஒரு பயங்கரமான விடையம் எனவும் எதிர்கட்சித்தலைவர் சபையில் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில் இவ்வாறு ஆயுதங்களுடன் வந்தவர்கள் யார் என்பதனை தெளிவுபடுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.