பிறந்து இரண்டு நாட்களேயான பச்சிளம் குழந்தையை வீசியது யார்? உயிருடன் மீட்பு
குருணாகல், மாவத்தகம, பரகஹதெனிய, சிங்கபுர பிரதேசத்தில் உள்ள வயலில் இருந்து பிறந்து இரண்டு நாட்களேயான குழந்தை ஒன்று உயிருடன் மீட்கப்பட்டதாக மாவத்தகம பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தசம்பவம் இன்று (17) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வயல் பகுதியில் குழந்தை உயிருடன் மீட்பு
வயல் பகுதியில் குழந்தை ஒன்று இருப்பதாக பிரதேசவாசிகள் வழங்கிய தகவலுக்கு அமைய சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குழந்தையை பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
மீட்க்கப்பட்ட குழந்தை மாவத்தகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக குருணாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் குழந்தையின் பெற்றோர் குழந்தையை வயலில் விட்டுச் சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பில் மாவத்தகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.