நாடாளுமன்றத்தில் கூச்சலிடுபவர்கள் வரிசையாக சிறைக்கு அனுப்ப நடவடிக்கை
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி ஆசனங்களில் சத்தமாக கூச்சலிடுபவர்கள் வரிசையாக சிறைக்கு செல்வார்கள் என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினிந்து சமன் ஹென்னாயக்க தெரிவித்துள்ளார்.
பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போது இதனை குறிப்பிட்டுள்ளார்.
எனவே, நாடாளுமன்றத்தில் சத்தமாக கூச்சலிடும் எதிர்க்கட்சியினரின் பெயர் பட்டியலை ஒழுங்காக வைத்திருந்தால், சிறைக்குச் செல்வோரின் பட்டியலையும் அடையாளம் காண முடியும் என்று அவர் கூறியுள்ளார்.
இரகசிய பொலிஸார்
இரகசியப் பொலிஸார் தங்கள் வீடுகளுக்கு வந்திருப்பதையும், அவர்கள் விசாரிக்கப்படுவதையும் அறிந்ததால் அவர்கள் சத்தமாக கத்துகிறார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் கூச்சலிடும் வரிசைக்கமைய, அவர்கள் சிறை செல்வார்கள் என தான் உத்தரவாதம் அளிப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.