கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் எங்கே போனார் ?
இலங்கை நாடாளுமன்றத்தில் 225 உறுப்பினர்கள் உள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரும் வீடு செல்ல வேண்டும் என்றே காலி முகத்திடல் போராட்டக்களத்திலும் குரல் எழுப்புகிறார்கள். ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் 89 வயது காரணமாக இயங்கு நிலையில் இல்லை என்பதை இவர்களில் எவரும் கண்டுகொள்வதில்லை.
அவரது மூப்பும், அவரது மாறுபட்ட அறிக்கைகளும் சிங்கள ஆட்சியாளர்களைப் பொறுத்தவரை அவர்களது அரசியல் நகர்வுகளுக்கு மிகவும் சாதகமாகின்றன. மூத்தவர்கள் அல்லது வயது முதிர்ந்தவர்களை அனுபவசாலிகள் என நம்பும் பழக்கம் தமிழ் மக்களில் சிலரிடம் உண்டு. அவ்வாறு மூத்த தலைவர்களைக் கனம் பண்ணுவது என்ற பெயரில் மூத்தோரின் மூடத்தனங்களையும் சுமக்க வேண்டியிருக்கிறது.
திருமலை மக்களின் அவலம்
திருகோணமலையானது 3 இனத்தவர்களும் வாழ்கின்ற முக்கிய மாவட்டம். அங்கு அரசியல் ரீதியாகவும் நிலங்களைக் கபளீகரம் செய்யும் விடயத்திலும் தமிழரின் நிலை நாளுக்கு நாள் பலவீனமடைந்து வருகிறது. உறுப்பி நிலமை இவ்வாறிருக்க அந்த இடங்களைச் சென்று பார்க்கவோ மக்களின் பிரச்சினைகளை நேரில் சென்று கவனிக்கவோ அந்த மாவட்டத்தைப் பிரதிபலிக்கின்ற இரா. சம்பந்தனால் முடியாது.
அந்த வயோதிபரைத் துன்பப்படுத்தும் நோக்கில் மனிதாபிமானமின்றிச் செயற்பட்டவர்கள் சம்பந்தனுக்கு 2020ஆம் ஆண்டுத் தேர்தலில் வாக்களித்த தமிழ் மக்களே. சம்பந்தனைத் தோற்கடிப்பதற்கு அதே கட்சிக்குள் இருக்கின்ற சிலர் முனைந்தபோதிலும் அதே கட்சியில் இரண்டாவது அதிகூடிய விருப்பு வாக்கைப் பெற்றவரை விட சம்மந்தன் 141 வாக்குகள் அதிகம் பெற்று நாடாளுமன்றம் சென்றார்.
சம்பந்தனை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று நினைத்துச் செயற்பட்ட திருகோணமலை தமிழருக்கு அரும்பொட்டில் அந்த வாய்ப்பும் இல்லாது போயிற்று. சம்பந்தனைத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவராகவைத்துக்கொண்டு 2020ஆம் ஆண்டுப் பொதுத்தேர்தலில் போட்டியி டவிடாது தமிழ் அரசுக் கட்சி தடுத்திருக்கவேண்டும்.
தற்போது நாடு எதிர்கொள்ளும் பிரச்சினையுடன் ஒப்பிடும்போது திருகோணமலைத் தமிழ் மக்கள் மிகத் துன்பப்படும் நிலையில் தமக்கான ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் களத்தில் இல்லை என்ற குறைபாடு பெரிதாகப் பேசப்படுகிறது. திருகோணமலையைச் சேர்ந்த நண்பர் ஒருவருடன் உரையாடியபோது எப்படியிருக்கிறது திருகோணமலை நிலமை...? என்று கேட்க, "எங்களுக் குக் கோத்தா வீட்டுக்குப்போவதோ, 21ஆவது அரசமைப்புத் திருத்தமோ அவசியமில்லை.
சம்பந்தன் தனது பதவியைத் துறந்து அடுத்த நிலையில் இருக்கும் குகதாசன் என்பவரை நாடாளுமன்ற உறுப்பினர் ஆக்க வேண் டும்" என்றார். வடக்கு மாகாணசபை இயங்கிய காலத்தில் அதன் காலப்பகுதியை இரண்டாக அல்லது மூன்றாகப் பிரித்துத் தமது கட்சியில் தேர்தலில் போட்டி யிட்ட இரண்டாம் மூன்றாம் நிலையிலிருந்தவர்களை மாகாணசபைக்கு அனுப்பினார்கள் முஸ்லிம் தலைவர்கள். சாகும்வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கவேண்டும் என்ற கெட்ட உதாரணம் தமிழ் அரசுக் கட்சியினரிடம் மட்டுமே இருக்கிறது.
கட்சியினரிடம் மட்டுமே இருக்கிறது. தந்தை செல்வா, அமிர்தலிங்கம் (யாழ்ப்பாணத்தில் தேர்தலில் போட்டி யிட முடியாத நிலையில் மட்டக்களப்பில் தேர்தலில் போட்டியிட்டுத் தோற்ற பின்னர் தேசியப் பட்டியல் உறுப்பினராக இருக்கும்போது 1989 ஜூலை 13இல் கொல்லப்பட்டவர். அந்த வெற்றிடத்தை வைத்தே மாவை சேனாதி ராசா முதல் தடவையாக நாடாளுமன்றப் படியேறச் சந்தர்ப்பம் கிடைத்தது.
அவரது 2ஆவது நாடாளுமன்றப் பிரசன்னம் 10 வருடங்களின் பின் நீலன்திருச்செல்வத்தின் சாவில் 1999 ஜூலை 29இன் பின்பு ஏற்பட்டது, சம்பந்தன் 1989ஆம் ஆண்டுத் தேர்தலில் 6ஆயிரத்து 48 வாக்குகள் பெற்றுத் தோற்றார். 1994இல் 19ஆயிரத்து 252 வாக்குகள் பெற்றுத் தோற்றார். அப்போது தங்கத்துரை அவர்கள் 22ஆயிரத்து 409 வாக்குக ளைப் பெற்று வெற்றிபெற்றார்.
1997 ஜூலை 5ஆம் திகதி தங்கத்துரை கொல்லப்பட்டதைத் தொடர்ந்து தங்கத்துரைக்குப் பதிலாக நாடாளுமன்றம் சென்றார் சம்பந்தன். திருகோணமலை மாவட்டத்தில் இரண்டு தட வைகள் தேர்தலில் தோல்வியுற்ற சம்பந்தன் தங்கத்துரையின் சாவுக்குப் பின்னர் நாடாளுமன்றம் சென்றதால் தங்கத்துரையின் படு கொலைக்கும் சம்பந்தனின் நாடாளுமன்றப் பிரவேசத்துக்கும் தொடர்பு இருக்கிறது என்று திருகோணமலை மக்கள் மத்தியில் ஒரு கருத்துண்டு.
அதன் பின்னர் 2 ஆயிரம் ஆண்டுத் தேர்தலில் சம்பந்தன் மீண்டும் தோற்கடிக்கப்பட்டார். "தமிழ் மக்களுக்கான கௌரவமான தீர்வு" என்று சம்பந்தன் தொடர்ந்தும்கூறி வருகிறார். 'ஐயா தமிழ் மக்களுக்கான தீர்வைப் பெற்றுத் தந்துவிட்டுத்தான் சாவார்" என்கின்றனர் அவரது கட்சித் தொண்டர்கள். அரசியல் தீர்வுக்கான எந்தவிதமான காத்திரமான சிந்தனையும் இல்லாமல் வருடப் பிறப்பு, தீபாவளி, தைப்பொங் கலுக்குத தீர்வு எனக்கூறித் தொடர்ந் தும் காலத்தை இழுத்து வருகிறார் சம்பந்தன்.