வாட்ஸ்அப் மெசேஜில் புதிய அப்டேட்
மெட்டா நிறுவனத்துக்குச் சொந்தமான வாட்ஸ்அப், தற்போது புதிய வசதியை சோதனை செய்து வருகிறது. குரல் டிரான்ஸ்கிரிப்ஷன் அம்சத்தை சோதிக்கிறது.
அதாவது, டெஸ்க்டாப்பில் ஆடியோ செய்திகளைப் படிக்க இந்த வசதியைப் பயன்படுத்தலாம்.
இது தற்போது சோதனை அடிப்படையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. Whatsapp பீட்டா வெர்ஷன் 2.24.7.7 மூலம் சோதனை அடிப்படையில் கிடைக்கிறது.
வாட்ஸ்அப் பயனர்கள் டிரான்ஸ்கிரிப்ஷனை அன்லாக் செய்ய கூடுதலாக 150 எம்பி டேட்டாவைச் செலவிட வேண்டும். டிரான்ஸ்கிரிப்ஷன் பதிவிறக்கம் செய்யப்பட்டவுடன், ஆடியோவைக் கேட்காமல் டெக்ஸ்ட் மூலம் தகவலை அணுகலாம்.
உங்கள் மொபைலின் பேச்சு அங்கீகாரத்தைப் பயன்படுத்தி என்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்யப்பட்ட டிரான்ஸ்கிரிப்டுகளை WhatsApp வழங்குகிறது.
பயனர் பாதுகாப்பை உறுதிசெய்ய, டிரான்ஸ்கிரிப்ஷன் உங்கள் மொபைலிலேயே செய்யப்படும்.
இந்த அம்சம் விரைவில் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் அறிமுகப்படுத்தப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.