தோல்விக்கு பின்னர் கமல்ஹாசன் சொன்ன விஷயம்; வைரலாகும் பதிவு!
தமிழக தொகுதிகளில் வெற்றி பெற்று, திமுக அடுத்த 5 ஆண்டுகளுக்கு தமிழகத்தின் ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்நிலையில், நடிகர் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிட்டிருந்தார்.
கோவை தெற்கு தொகுதியில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே கமல்ஹாசன் அதிகமாக முன்னிலை வகித்து வந்த நிலையில் , இறுதிச் சுற்றில் வானதி ஸ்ரீனிவாசன் 1500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கிட்டத்தட்ட நூலிழையில், இந்த வெற்றி வாய்ப்பை கமல்ஹாசன் தவற விட்ட நிலையில், மக்கள் நீதி மைய்ய தொண்டர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
பெருவெற்றி பெற்றுள்ள @mkstalin அவர்களுக்கு மனப்பூர்வமான பாராட்டுக்கள். நெருக்கடியான காலகட்டத்தில் தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்கிறீர்கள். சிறப்பாக செயல்பட்டு தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல என் வாழ்த்துக்கள்.
— Kamal Haasan (@ikamalhaasan) May 2, 2021
இதனைத் தொடர்ந்து, தனது தோல்விக்கு பின்னர், ட்விட்டர் பக்கத்தில் கமல்ஹாசன் ட்வீட் ஒன்றைச் செய்துள்ளார்.
அதில், ‘பெருவெற்றி பெற்றுள்ள @mkstalin அவர்களுக்கு மனப்பூர்வமான பாராட்டுக்கள். நெருக்கடியான காலகட்டத்தில் தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்கிறீர்கள். சிறப்பாக செயல்பட்டு தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல வாழ்த்துக்கள்’ என பதிவிட்டுள்ளார்.