நான்குபேரை மட்டும் ஜனாதிபதி நியமிக்க என்ன காரணம்?
நடளாவிய ரீதியில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் வெடித்ததை அடுத்து பல அமைச்சர்கள் பதவி விலகியுள்ளனர்.
இந்நிலையில் இன்றையதினம் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவினால் நான்கு பேர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளமை ஏன் என்பது தொடர்பில் ,காரணம் வெளியாகியுள்ளது.
அதாவது முழுமையான அமைச்சரவை நியமிக்கப்படும் வரை, நாடாளுமன்றம் மற்றும் நாட்டின் ஏனைய செயற்பாடுகளை சட்ட ரீதியாகவும் நிலையாகவும் பேணுவதற்காக அந்த நான்கு அமைச்சர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளதாக கூறப்படுகின்றது.
வெளிநாட்டலுவல்கள் மற்றும் நிதி நடவடிக்கைகள் அமைச்சுப் பதவி மற்றும் பாராளுமன்றத்தின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு சபைத் தலைவர் மற்றும் பிரதம கொறடா ஒருவரை நியமிக்க வேண்டியுள்ளதால், இந்த அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டில் நிலவுகின்ற தேசிய சவால்களை தீர்ப்பதற்கு பங்களிக்குமாறு நாடா ளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளிடமும் ஜனாதிபதி ஏற்கனவே கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்நிலையில் எதிர்காலத்தில் அவர்களுடன் கலந்துரையாடி நிரந்தர அமைச்சரவை நியமிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் ஒரு நாடு என்ற வகையில் எதிர்நோக்கும் பொருளாதார சவாலை வெற்றிகொள்வதற்கும் நாட்டின் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கும் ஒட்டுமொத்த மக்களின் ஆதரவை வழங்குமாறும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.
தொடர்புடைய செய்தி
சற்றுமுன் புதிய அமைச்சர்கள் நியமனம்!