குழுவொன்றினால் இரு காவல்துறையினருக்கு நேர்ந்த கதி
பலபிட்டிய பகுதியில் மதுபோதையில் இருந்த குழுவொன்றினால் நடத்தப்பட்ட தாக்குதலில் காயமடைந்த இரண்டு காவல்துறையினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அஹூன்கல்ல காவல்நிலையத்தில் பணியாற்றும் இரண்டு காவல்துறையினரே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வீதியில் மது அருந்திய குழுவினரை அங்கிருந்து செல்லுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இதன்போது குறித்த நபர்கள் காவல்துறையினரை தாக்கியுள்ளதோடு, அவர்களை அங்கிருந்து கலைப்பதற்காக காவல்துறையினர் வானை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
இச் சம்பவத்தில் ஒரு காவல்துறை உத்தியோகத்தருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.