விருந்துபசாரத்தின்போது 21 வயது இளைஞருக்கு நேர்ந்த கதி
மெல்சிறிபுர பிரேதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற மது விருந்தில் பங்கேற்ற 21 வயது இளைஞர் ஒருவர் அங்கிருந்த நீச்சல் குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .
குறித்த இளைஞன் நீச்சல் குளத்தில் இருந்து மீட்கப்பட்டு போல்கொல்ல மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் சமயத்தில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் உடஹொரொம்புவ, ரிதிகம பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். விடுதியில் நண்பர்கள் குழு நடத்திய டிஜே பார்ட்டியில் மது அருந்திவிட்டு இளைஞர் கலந்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் குறித்த இளைஞர்கள் குழு மதுபோதையில் நீச்சல் குளத்தை பயன்படுத்தியுள்ளதும், அந்த சமயத்தில் நீரில் மூழ்கிய நபரை கவனிக்காத நிலையில் அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.