காலிமுகத்திடலில் நடந்தது என்ன! நேரடி ரிப்போர்ட் (Video)
இன்று அதிகாலை காலிமுகத்திடல் பகுதியில் இராணுவம், பொலிஸ் விசேட அதிரடி படையினர் போராட்டப் பகுதிக்குள் பிரவேசித்து போராட்டக்காரர்களை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.
இது தொடர்பில் சம்பவ இடத்தில் இருந்த இளைஞரொருவர் தான் நேரடியாக பார்த்த சம்பவங்களை பகிர்ந்துள்ளார். இது தொடர்பில் அவர் கூறுகையில்,
இன்று அதிகாலை 1.30 மணியளவில் பாதுகாப்பிற்காக இருந்த பொலிஸார் அனைவரும் காலிமுகத்திடல் பகுதியில் இருந்து சென்றுவிட்டனர்.
தொடர்ந்து பெருமளவு விசேட அதிரடிப்படையினர் திடீரென இப்பகுதியில் குவிக்கப்பட்டு போராட்டக்களப்பகுதியை முழுமையாக சுற்றிவளைத்துவிட்டனர். எனினும் இந்த விடயம் தொடர்பில் எமக்கு ஏற்கனவே தகவல் கிடைத்திருந்தது. நாங்களும் விழிப்பாகவே இருந்தோம் என குறிப்பிட்டுள்ளார்.