சர்க்கரை நோயாளிகள் வருடத்தில் இரண்டு முறை இதனை கட்டாயம் செய்யவேண்டுமாம்!
சர்க்கரை நோயாளிகள் hba1c என்னும் பரிசோதனையை வருடத்தில் இரண்டு முறை செய்ய வேண்டும் என கூறப்படுகின்றது.
HbA1C என்பது இரத்தத்தில் ஹீமோகுளோபின் உடன் இணைக்கப்பட்ட சர்க்கரையின் அளவை அளவிடும் சோதனையாகும்.
உடலில் உயர் hba1c அளவுகள் பெரும்பாலும் நீரிழிவு சிக்கல்களுடன் தொடர்புடையதாக இருப்பதால் இதனை முறையாக பேணுவதோடு A1C அளவையும் குறைத்துக் கொள்ள வேண்டும்.
சர்க்கரை நோயாளிகள் முறையான உணவுத்திட்டத்தைக் கடைபிடிக்க வேண்டும்.
சர்க்கரை நோயாளிகள் கடைப்பிடிக்க வேண்டியவை
உணவில் இனிப்புகளை குறைத்து ஊட்டச்சத்தை அதிகரிப்பதோடு ஒரே மாதிரியான சுவையில் அன்றி வெவ்வேறு சுவைகளில் உணவினை எடுத்துக் கொள்ள வேண்டும். அத்தோடு பசி ஏற்படும் போது சரியான அளவில் உணவினை எடுத்துக் கொள்ள வேண்டும்.
சர்க்கரை அளவின் பாவணையை குறைப்பதனால் உடலில் A1C அளவைக் கட்டுப்படுத்த முடியும்.
பசியின் அளவை கட்டுப்படுத்துவதற்கு வீட்டில் சிறிய அளவிலான தட்டுக்களைப் பயன்படுத்துங்கள்.
உணவின வீட்டில் தயாரித்து உண்பதனை வழக்கமாக்கிக் கொள்ளுதல் சிறந்ததாகும்.
சரியான உணவுகளை சரியான விகிதத்தில் சாப்பிடும் போது உங்கள் உணவு நேர கணக்கீடுகளை எளிதாக்க தட்டு உணவு உதவும். தட்டில் உணவு வைக்கும் போது அதை பிரியுங்கள்.
தட்டில் உள்ளவற்றில் பாதி குறைந்த கார்ப் காய்கறிகளும், தட்டின் அடுத்த கால் பகுதியில் புரதம் அடங்கிய உணவுகளும் , இறுதி கால் பகுதியில் கார்போஹைட்ரேட் அரிசி மற்றும் முழு தானிய உணவுகளாக காணப்பட வேண்டும்.
அடுத்த அம்சமாக அன்றாடம் உடற்பயிற்சியினை மேற்கொள்ள வேண்டும் . சர்க்கரை நோயாளிகள் உழைப்பை அதிகரிப்பதன் மூலம் A1C அளவை நன்றாக குறைக்க செய்யலாம். நாள்தோறும் மிதமான நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
மதிய உணவுக்கு பிறகு 20 நிமிடங்கள் நடைப்பயணம் செய்வதும் கூட நன்மை தான். வாரத்தில் 150 நிமிடங்கள் கூடுதல் செயல்பாடுகளை செய்வதன் மூலம் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கலாம்.
எனினும் உடற்பயிற்சி செய்வது இரத்த சர்க்கரை அளவை பாதிக்கூடும் என்பதால் உடல் சுகாதார நிலைமைகளை பொறுத்து மருத்துவரிடம் ஆலோசித்து பிறகு உடற்பயிற்சி செய்யவும்.
உட்கார்ந்துப் பணியில் இருப்பவர்கள் அவசியமாக ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 2 நிமிடங்கள் எழுந்திருக்க வேண்டும். சர்க்கரை நோயாளிகள் உடல் எடை கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும்.
அதிகரித்துள்ள எடை இழப்பிற்கு மருத்துவ ஆலோசனையுடன் முறையான அணுகுமுறையினை மேற்கொள்ள வேண்டும். சர்க்கரை நோயாளிகள் மாத்திரைகளை தவிர்க்க கூடாது.
சர்க்கரை நோயாளிகள் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் நீரிழிவு மருந்துகள் எடுத்துகொள்வதனால் A1C அளவை நிர்வகிக்க முடியும். உணவுக்கு பிந்தைய சர்க்கரை அளவு ஏறுவதை குறைத்து A1C அளவை குறைத்துக் கொள்ள உணவிற்குப் பிறகு சில மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
சர்க்கரை நோயாளிகள் தங்கள் A1C அளவை குறைக்க முயற்சிப்பதில் தொடர்ந்து செயல்பட வேண்டும்.
அடுத்த அம்சமாக அடிக்கடி பரிசோதனைகளை மேற்கொண்டு மேற்குறிப்பிட்டுள்ள அன்றாட செயன்முறைகளை கடைப்படித்தொழுக வேண்டும்.