எச்சரிக்கை மீறி நீராடச் சென்ற மூன்று இளைஞர்களில் ஒருவருக்கு நேர்ந்த அதிர்ச்சி!
கடலில் நீராடச் சென்ற 3 இளைஞர்கள் கடலில் அடித்துச் செல்லப்பட்டதுடன் அவர்களில் ஒருவர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்றையதினம் (04-05-2024) வெலிகம பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தின் போது, இரண்டு இளைஞர்களின் உயிரையை மாத்திரமே காப்பாற்ற முடிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், சம்பவத்தில் வெலிகம, கொலெதந்த பகுதியைச் சேர்ந்த 20 வயதான அப்துல் பாஷித் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, இம்மாதம் 6ஆம் திகதி வரை கடலில் நீராடுவதை தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவினரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் இளைஞர்கள் நீராடச் சென்றுள்ளனர்.