எடை குறைப்பு முதல் இதயம் ஆரோக்கியம் வரை; சர்க்கரை வள்ளிக் கிழங்கின் நன்மைகள்!
சர்க்கரை வள்ளிக் கிழங்கு (Sweet Potato) நார்ச்சத்து, வைட்டமின் ஏ, சி, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் நிறைந்த ஒரு ஆரோக்கியமான உணவாகும். இது மலச்சிக்கலை நீக்கி, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
இபோமோயா பட்டடாஸ் (Ipomoea batatas) என்று அழைக்கப்படும் இது, இனிப்பு சுவையுடையது, உடல் எடை குறைப்பு மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு சிறந்தது.

சர்க்கரை வள்ளிக் கிழங்கு அள்ளித்தரும் ஆரோக்கிய நன்மைகள்
உடலில் சதை மற்றும் எலும்புகளின் ஆரோக்கியம்
உடலில் சதை மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உதவும் இதனை வயது வித்தியாசமில்லாமல் அனைவரும் சாப்பிடலாம்.
சர்க்கரை வள்ளிக்கிழங்கில் உடலில் குளூக்கோஸ் அளவை அதிகரிக்கும் கிளைசெமிக் இண்டெக்ஸ் குறைவாக இருப்பதால் சர்க்கரை நோய் உள்ளவர்களும் இதைச் சாப்பிடலாம்.

மலச்சிக்கல்
நார்சத்து நிறைந்துள்ளதால் குடலின் ஆரோக்கியம் மேம்படுத்தப்படுகிறது. இதனால் மலச்சிக்கல் உள்ளிட்ட குடல் சாந்த பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது.
பெருந்தமனி தடிப்பு வராமல் தடுக்கிறது
இதிலுள்ள வைட்டமின் பி அதிரோஸ்கிளிரோசிஸ் என சொல்லப்படும் பெருந்தமனி தடிப்பு வராமல் தடுக்கிறது. இதனால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் குறைகிறது.
பெருந்தமனி தடிப்பு புகைப்பிடித்தல், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், மது அருந்துதல், அதிக எடை ஆகியவை காரணமாக ஏற்படுகிறது.

புற்றுநோய் வராமல் தடுக்கிறது
அதுமட்டுமல்லாது இதிலுள்ள பொட்டாசியம், மாங்கனீசு, மெக்னீசியம், கரோட்டினாய்ட்ஸ், பீட்டா கரோட்டின் ஆகியவை வாய் முதல் ஆசனவாய் வரையிலான உறுப்புகளில் ஏற்படும் புற்றுநோய்க்கான செல்களை அழித்து புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
இது உள் உறுப்புகளின் வீக்கத்தைக் குறைத்து, இயற்கையாகவே உடலை சுத்தம் செய்யும் பண்புகளை கொண்டுள்ளது. இதிலுள்ள வைட்டமின் ஏ கண், தோல்களின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது.

கர்ப்பிணிப் பெண்களுக்கு
கர்ப்பிணிப் பெண்களுக்கு தேவையான ஊட்டச்சத்தான போலிக் அமிலமானது சர்க்கரை வள்ளி கிழங்கு மூலம் எளிதாக கிடைக்கிறது. இதனை அதிகம் சாப்பிட்டால் கருவில் உள்ள குழந்தைக்கும் மிக நல்லது என கூறப்படுகின்றது.