உடல் எடையை எளிதில் குறைக்க வேண்டுமா? இந்த ஒரு உணவு போதும்!
தற்போது இருக்கும் காலக்கட்டத்தில், எடை அதிகரிப்பு, இதயநோய் பிரச்சனை மற்றும் செரிமான கோளாறுகள் உள்ளிட்ட பிரச்சனைகளை மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.
மேலும், நாளடைவில் பெரிய உடல் சார்ந்த நோய்களுக்கும் இவையே காரணமாக அமைகின்றன. உடல் எடையை குறைக்க முயற்சிக்கும் மக்கள் சிலர் தவறான வழிமுறைகள் மற்றும் மருந்துவரின் ஆலோசனையைப் பெறாமல் கடைபிடிக்கும் டையட் இன்னும் கூடுதலான சிக்கல்களை ஏற்படுத்திவிடுகிறது.
இதனால் சரியான உணவு முறையை கடைபிடித்து உடல் எடையை குறைப்பது அவசியம். அந்தவகையில் உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை பயக்கும் முட்டையை பயன்படுத்தி உடல் எடையைக் குறைக்கலாம்.
புரதங்கள் அதிகமாக இருக்கும் முட்டையுடன் சில உணவுப் பொருட்களை சேர்த்து சாப்பிடும்போது உங்களின் எடை குறைப்புக்கான முயற்சியில் நல்ல பலன் கிட்டும்.
முட்டை மற்றும் கீரை : முட்டையுடன் கீரை சாப்பிடுவது விரைவான எடை இழப்புக்கு ஒரு சிறந்த உணவு முறை. ஒரு கப் கீரையில் ஏழு கலோரிகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
இவற்றை உணவாக உட்கொள்ளும்போது உடலுக்கு தேவையான ஆற்றல் மற்றும் புரதங்கள் எளிதாக கிடைத்துவிடும். அதேநேரத்தில் குறைவான உணவையும் நீங்கள் எடுத்துக் கொண்டிருப்பீர்கள். இந்த உணவு உங்களின் பசியை நீண்ட நேரம் கட்டுக்குள் வைத்திருக்கும்.
முட்டை மற்றும் தேங்காய் எண்ணெய் : வெண்ணெய் அல்லது மற்ற வகை எண்ணெயில் செய்யப்பட்ட ஆம்லெட்களை சாப்பிடுவது உங்கள் உடலுக்கு அதிக கலோரிகளை வழங்குகிறது. தேங்காய் எண்ணெய் வளர்சிதை மாற்றத்தை 5% அதிகரித்து எடையை குறைக்க உதவுகிறது.
30 பேரிடம் நடத்திய ஆய்வில், தினமும் இரண்டு டீஸ்பூன் தேங்காய் எண்ணெயை ஒரு மாதத்திற்கு உட்கொள்வதால், அவர்களின் இடுப்பின் அளவு 1.1 அங்குலம் குறைந்துள்ளது.
நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், அடுத்த முறை எண்ணெய் அல்லது வெண்ணெய்க்குப் பதிலாக தேங்காய் எண்ணெயில் ஆம்லெட் செய்து சாப்பிடுங்கள்.
முட்டை மற்றும் ஓட்ஸ் : முட்டையுடன் ஓட்ஸ் கலந்து சாப்பிட்டால் தொப்பையை எளிதில் குறைக்கலாம். ஓட்ஸில் உள்ள மாவுச்சத்து செரிமானத்திற்கு உதவுகிறது. முட்டையுடன் ஓட்ஸ் சாப்பிடுவது உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.
முட்டையில் இருக்கும் ஊட்டச்சத்து : உடலில் உள்ள ஊட்டச்சத்து குறைபாட்டை முட்டை எளிதில் ஈடுசெய்யும். ஒரு முட்டையில் 75 கலோரிகள் உள்ளன. இதில் 7 கிராம் உயர்தர புரதம் உள்ளது.
கூடுதலாக, ஒரு முட்டை சாப்பிடுவதால் 5 கிராம் கொழுப்பு, 1.6 கிராம் நிறைவுற்ற கொழுப்பு மற்றும் இரும்புச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் கரோட்டினாய்டுகள் உடலுக்கு கிடைக்கும். இந்த காரணத்திற்காக உடல் எடை குறைப்புக்கான சிறந்த டையட்டில் முட்டை முதல் இடத்தில் உள்ளது.