எடை இழப்புக்காக பயன்படும் கொள்ளில் இத்தனை பக்கவிளைவுகள் என தெரியுமா?
எடை இழப்பை ஊக்குவிக்கும் இது பரவலான நோய்களுக்கும் சிகிச்சையளிக்க உதவுகிறது. உடலுக்கு ஊட்டச்சத்துக்களை நிறைவாக அளிக்கும் கொள்ளு உடலுக்கு பக்கவிளைவுகளை ஏற்படுத்துமா என்பது பற்றி நாம் இங்கு பார்ப்போம்.
யூரிக் அமிலம் அதிகரிக்கும்
கொள்ளு அதிகமாக எடுத்துகொண்டால் அது கீல்வாதத்தை உண்டு செய்யலாம். இவற்றில் ப்யூரின் அதிகம் இருப்பதால் உடல் ப்யூரினை உடைக்கும் போது யுரிக் அமிலம் அதிகரிக்கலாம். அதிக யூரிக் அமிலம் கீல்வாதம் மற்றும் மூட்டுவலியை உண்டு செய்யும்.ஏற்கனவே கீல்வாத பிரச்சனை இருப்பவர்கள் கொள்ளுவை மிதமாக சேர்க்க வேண்டும். அதிகமாக எடுத்துகொண்டால் அது அறிகுறிகளை தீவிரப்படுத்தும்.
வாய்வு பிடிப்பு அதிகரிக்கும்
கொள்ளு நார்ச்சத்துக்கான நல்ல ஆதாரம் ஆகும். ஆனால் இதை அளவுக்கு அதிகமாக எடுக்கும் போது அது வாய்வு மற்றும் செரிமான பிரச்சனைகளை உண்டு செய்யலாம். கொள்ளு செரிமானத்தை மேம்படுத்து என்றாலும் அதிகமாக சேர்க்கும் போது இது வாய்வு பிடிப்பு ஏற்படுத்தலம்.
வயிறு வீக்கம் உண்டாகும்
கொள்ளு ஒரே நாளில் அதிகமாக எடுக்கும் போது அது வயிறு வீக்கம் மற்றும் உப்புசம் உண்டு செய்யலாம். சில நேரங்களில் வயிறு வலியும் இருக்கும். இதிலிருக்கும் கார்போஹைட்ரேட்டில் ராஃபினோஸ் ஒலிகோசாக்கரைடுகள் உள்ளது. இது செரிமானத்தின் போது வாயு மற்றும் வீக்கத்தை உண்டு செய்யும்.
உடல் தாதுக்கள் உறிஞ்சுவதை தடுக்கலாம்
கொள்ளுவில் உள்ள பைடிக் அமிலம் போன்ற ஆன் டி நியூட்ரியண்ட்கள் உள்ளன. இது உடல் சில தாதுக்கள் உறிஞ்சுவதை தடுக்கலாம். எனினும் இதை கட்டுப்படுத்த சமைப்பதற்கு முன்பு ஊறவைப்பது முளைக்கட்டி பயன்படுத்துவது பைடிக் அமிலத்தின் உள்ளடக்கத்தை கணிசமாக குறைக்க உதவும். மிதமாக எடுத்துகொண்டால் அவை ஆரோக்கியத்தை மேம்படுத்த செய்யும்.