எளிமையான முறையில் உடல் எடையை குறைக்கணுமா? இதை குடிக்க போதும்
தற்போதைய காலக்கட்டத்தில் பரபரப்பான வாழ்க்கை முறையாலும், உடற்பயிற்சியின்மையாலும், மக்களின் உடல் எடை அதிகரித்து வருகிறது.
இவ்வாறான பிரச்சனையை சமாளிக்க, மக்கள் யோகா, பிராணயாமம் மற்றும் ஜிம்மில் சேருதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.
அவர்களில் சிலர் உடல் எடையை குறைப்பதில் வெற்றி பெறுகிறார்கள், மற்றவர்கள் பிரச்சனையுடன் தொடர்ந்து போராடுகிறார்கள்.
சொல்லப்போனால், பல வீட்டு வைத்தியங்கள் மற்றும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் மூலமே எளிதாக எடையை குறைக்க முடியும்.
உடல் எடையை குறைக்க தேநீர் தொடர்பான அற்புதமான வீட்டு வைத்தியத்தை இந்த பதிவில் காணலாம். இதன் மூலம் உங்களுக்கு எந்த பக்க விளைவும் ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
தேநீரில் 2 துளசி இலைகளை பயன்படுத்தவும்: இந்த தேநீர் செய்ய எந்த ஒரு விசேஷ பொருளும் தேவையில்லை. துளசி இலைகள் இருந்தால் போதும். தேநீர் செய்யும் போதெல்லாம், 2 துளசி இலைகளை நன்றாக சுத்தம் செய்து அதில் போடவும்.
சர்க்கரை மற்றும் பால் குறைவாக சேர்க்கவும். தினமும் காலையிலும் மாலையிலும் இந்த டீயை குடிப்பதால், படிப்படியாக தேவையற்ற உடல் எடை குறையத் தொடங்கி, உடல் வடிவம் பெறுகிறது.
மனச்சோர்வு விலகும்: துளசி தேநீர் அதிக உடல் எடையை குறைப்பதில் மட்டுமல்ல, மனச்சோர்வு மற்றும் மன அழுத்தத்தை நீக்குவதற்கும் பெரிதும் உதவுகிறது. மன அழுத்தம் காரணமாக, பலருக்கு தூக்கமின்மை பிரச்சனையும் அதிகரிக்கிறது.
இதுபோன்ற சூழ்நிலையில், தினமும் மாலையில் துளசி டீ குடித்து வந்தால், அது நல்ல தூக்கத்தைப் பெற பெரிதும் உதவியாக இருக்கும்.
நோய்கள் சரியாகும் : இந்த டீயை உட்கொள்வதால் இருமல், சளி, காய்ச்சல் போன்ற நோய்கள் ஓடிவிடுவதுடன், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியும் அதிகரிக்கும் என்பதும் இதன் நன்மைகளில் ஒன்றாகும்.
துளசி டீ குடிப்பதன் மூலம், ஒருவர் உடலில் நேர்மறை சக்தியை உணர்கிறார். நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்க இந்த டீ உதவும்.