கார்த்திகை மாத கொண்டாட்டம் யாழில் வெறிச்சோடி காணப்பட்ட சந்தை!
நாட்டில் உள்ள தமிழர் பகுதிகளில் நாளையதினம் (24-11-2023) கார்த்திகை விளக்கீடு கொண்டாடப்படவுள்ள நிலையில் விளக்கீடு வியாபாரம் இம்முறை களைகட்டவில்லை என வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, யாழ் திருநெல்வேலி சந்தை வளாகத்தில் உள்ள கடைகளில் விளக்கீடு வியாபாரமின்றி வெறிச்சோடிய நிலையில் காணப்படுகின்றது.
யாழ்ப்பாணத்தில் தற்போது பெய்துவரும் பலத்த மழையினால் மக்கள் பெருமளவில் வரவில்லை என்பதுடன் மழையின் பொழுது விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ள கார்த்திகை விளக்குகளை படங்கால் மூடுவதும் திறப்பதுமாக இருக்கின்றோம் எனவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, நாளை ஞாயிறு விடுமுறை என்பதால் ஒருவேளை வியாபாரம் களைகட்டும் என்ற நம்பிக்கையில் நாளைய பொழுதுக்காக வியாபாரிகள் காத்திருக்கின்றார்கள்.