இலங்கையில் களைகட்டும் சித்திரை புத்தாண்டு கொண்டாட்டம்!(Photos)
இலங்கையில் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியுள்ள நிலையில் மக்கள் ஆர்வமாக புத்தாண்டை வரவேற்க பொருகளை கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
சோபகிருது வருடம்
நிகழும் மங்களகரமான சோபகிருது வருடம், உத்தராயண புண்ணிய கால வசந்த ருதுவில் பிருகு வாரமாகிய வெள்ளிக்கிழமையில் (14) கிருஷ்ணபட்சத்து நவமி திதியில் மேல்நோக்குள்ள திருவோணம் நட்சத்திரம் 2-ம் பாதத்திலும் மகர ராசியில் சிம்மம் லக்னத்திலும், சுக்கிரன் ஓரையிலும், மந்தயோகத்திலும் சந்திர மகாதசையில் ராகு புத்தி, ராகு அந்தரத்திலும், சகல செல்வங்களையும் தரப்போகும் சோபகிருது ஆண்டு மதியம் 1.57 மணிக்கும், திருக்கணிதப் பஞ்சாங்கப்படி மதியம் 2.59 மணிக்கும் பிறக்கிறது.
சூரிய பகவான் மீண்டும் மேஷ ராசியில் பிரவேசிக்கும் வரை உள்ள காலப்பகுதியே ஓர் தமிழ் வருஷமாகும்.
இந்த புத்தாண்டு 14.04.2023 அன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு மலையகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
புத்தாண்டை முன்னிட்டு 13.04.2023 அன்று அட்டனில் வர்த்தக நிறுவனங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டமை காணக்கூடியதாக இருந்தது.
பொதுமக்கள் அத்தியவசிய பொருட்களை கொள்வனவு செய்துவரும் நிலையில் இரவு பகலாக பொலிஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அத்தோடு விசேட போக்குவரத்து சேவைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.