உணவுப் பற்றாக்குறையால் பாதியில் நிறுத்தப்பட்ட திருமணம்
இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உணவுப் பற்றாக்குறை காரணமாகத் திருமணம் ஒன்று பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
மணமகனின் உறவினர்கள் மற்றும் விருந்தினர்களுக்கு உணவு போதுமானதாக இல்லை என்று குற்றம் சாட்டி, மணமகனின் குடும்பத்தினர் திருமணத்தை ரத்து செய்ய முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளதாகவும், மணமகன் தரப்பு திருமணத்தைத் தொடர மறுத்துவிட்டதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன் விளைவாக, மணமகளின் குடும்பத்தினர் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர்.
குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறித் திருமணத்தைத் தொடர மணமகன் விருப்பம் தெரிவித்ததை அடுத்து, காவல்துறையினர் தலையிட்டு இரு தரப்பினரையும் வரவழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இருப்பினும், இறுதியில், மணமகன் தரப்பு திருமணத்தை நடத்த ஒப்புக்கொண்டதால், மற்ற திருமண சடங்குகள் காவல் நிலையத்திற்குள் செய்யப்பட்டு திருமணம் நடத்தப்பட்டது