இலங்கையின் சீரற்ற காலநிலை ; விளாடிமிர் புடின் வெளியிட்ட தகவல்
இலங்கையில் சீரற்ற காலநிலை காரணமாக அனர்த்தங்களினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் குறித்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் தமது கவலையை வௌியிட்டுள்ளார்.
இது தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதி, தமது X கணக்கில் தெரிவித்துள்ளதாவது, அனர்த்தங்களால் உயிரிழந்தோருக்கு தமது இரங்கலைத் தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யாவின் ஆதரவு
இந்த கடினமான காலப்பகுதியில் ரஷ்யாவின் ஆதரவை மேலும் உறுதிப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகள் காரணமாக பல உயிர்களின் இழப்பு மற்றும் பாரிய அழிவுகள் குறித்து எனது உண்மையான அனுதாபங்களை தெரிவிக்கிறேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் எனது இரங்கலையும் ஆதரவையும் தெரிவிக்குமாறும், காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.