நாட்டைவிட்டுச் செல்ல தயாராகும் நாமல்; விசாரணைக்கு வருகிறது வழக்கு!
தனது அமைச்சுக்களிலிருந்து இராஜினாமா செய்துள்ள நாடாளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்க்ஷ வெளிநாடு செல்ல தயாராகி வருவதாக தெரிய வருகிறது. இது தொடர்பில் இன்று கொழும்பு மேல் நீதிமன்றில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டன.
வெளிப்படுத்த முடியாத வகையில் 30 மில்லியன் ரூபா சம்பாதித்தார் என கறுப்புப் பண சுத்திகரிப்பு சட்டத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்க்ஷவுடன் சேர்த்து 6 பேருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணையின்போதே இந்த தகவல் வெளிப்படுத்தப்பட்டது.
வழக்கில் பிரதிவாதியான நாமல் ராஜபக்க்ஷவுக்கு வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டிருந்தாலும் எந்தச் சத்தர்ப்பத்திலும் நீதிமன்றை தெளிவுபடுத்திய பின்னர் வெளிநாடு செல்ல அவருக்கு ஏற்கனவே அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி வெளிநாடு செல்வது தொடர்பில் நீதிமன்றுக்கு அறிவிப்பதற்காக வழக்கை எதிர்வரும் 28 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பன கோரிய நிலையில் அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக அந்த தகவல்கள் கூறுகின்றன.