பிளாஸ்டிக் போத்தல்களை விற்பனை செய்வோர் அவதானம் !
குழந்தைகளுக்கு பால் ஊட்ட பயன்படுத்தப்படும் தரமற்ற பிளாஸ்டிக் போத்தல்களை விற்பனை செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சர் லசந்த அழகியவண்ண அதிகாரிகளுக்கு இந்த பணிப்புரையை பணிப்புரை விடுத்துள்ளார்.
பாலிகார்பனேட்டினால் தயாரிக்கப்படும் பிளாஸ்டிக் பால் போத்தல்கள் தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபையினால் அங்கீகரிக்கப்படாத போதிலும், அவ்வாறான பொருட்கள் சந்தையில் இருப்பதாகவும், அதற்கான வசதிகள் இலங்கை தொழில்நுட்ப நிறுவனத்திடம் இருப்பதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
குழந்தைகளுக்கு திரவ உணவு வழங்குவதற்காக தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் போத்தல்களை இறக்குமதி செய்ய பதினெட்டு நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் அந்த நிறுவனங்களை நாட்டிற்குள் இறக்குமதி செய்வதற்கு மாத்திரமே அனுமதிப்பார் எனவும், பதிவு செய்யப்படாத நிறுவனங்களின் உற்பத்திகளின் மாதிரிகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.