நாட்டுக்கு வந்த சுற்றுலா தம்பதிகளை கதிகலங்கவைத்த சம்பவம்!
எல்ல பகுதியிலுள்ள ஒன்பது வளைவுப் பாலத்தின் மீது நடந்து சென்று கொண்டிருந்த வெளிநாட்டு சுற்றலா தம்பதிகளை குளவிகள் தாக்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தென்னாபிரிக்காவைச் சேர்ந்த லீன் மற்றும் டான் தம்பதியினர் ஒன்பது வளைவுப் பாலத்தின் மீது நடந்து சென்று கொண்டிருந்தபோதே குளவிகளின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.
தாக்கிய குளவிகள்
இருவருக்குமிடையிலான தூரம் சற்று அதிகம் என்பதால் டான் தனது மனைவிக்கு சில அறிவுறுத்தல்களை விடுக்கிறார். 'ஒரு குளவி உள்ளது, அசையாமல் நில்' என்று டான் எச்சரித்தபோது, லீன் மீது ஒரு குளுவி கொட்டியுள்ளது.
இதன்போது லீன் கூச்சலிடத் தொடங்கி தனது உடலில் காணப்பட்ட குளவிகளை அகற்ற முயற்சித்தபோது, 'அதைச் செய்யாதே, என டான் கூச்சலிட்டு மனைவியின் முகத்தை ரீ சேர்ட்டினால் மூடியுள்ளார்.
இதனையடுத்து அங்கிருந்த ஒரு பொலிஸ் அதிகாரியும் மற்றொரு நபரும் அவரது கழுத்தில் காணப்பட்ட 15க்கும் மேற்பட்ட குளவிகளை அகற்றி விட்டதாகவும் கூறப்படுகின்றது.
மருத்துவமனையில் சிகிற்சை
பின்னர் இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு குளவி விஷத்துக்கு எதிரான மாத்திரைகள் வழங்கப்பட்டன.
சம்பவம் தொடர்பில் விபரித்த லீன், "நான் பாலத்தின் மறுபக்கத்தை அடைந்தபோது, குளவிகள் இன்னும் என்னைத் தேடிக்கொண்டிருந்தன, யாரிடமாவது எனக்கு உதவுமாறு நான் கெஞ்சினேன்' என அவர் கூறியுள்ளார்.