இலங்கையில் சுற்றுலா சென்றவர்களுக்கு நேர்ந்த நிலை!
ஹப்புதளை – தம்பேத்தன்ன – லிப்டன் சீட் பகுதிக்கு சுற்றுலா சென்றிருந்த சுமார் 20 பேர் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் இன்றைய தினம் (04-12-2022) இடம்பெற்றுள்ளது.
குளவி கொட்டுக்கு இலக்கானவர்கள் ஹப்புத்தளை – பங்கெட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த 17 பேரும் இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த மூவருமே இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குளவி கொட்டுக்கு இலக்கானவர்களில் 5 வயதுக்கு குறைவான இரு சிறுவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இச்சம்பவம் குறித்த பிரதேசத்திற்கு சுற்றுலா செல்லும் பயணிகளை அச்சுறுத்தும் வகையிலும் அமைந்துள்ளது.