அழுது கொண்டிருந்தாரா ரோஹித் சர்மா? ரசிகர்கள் கவலை
மும்பை-ஐதராபாத் அணிகள் மோதிய ஆட்டத்தின் போது ரோஹித் சர்மா மனமுடைந்து காணப்பட்ட வீடியோ வைரலாக பரவி வருகிறது .
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் நேற்று (6) நடைபெற்ற 55-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் (MI Vs SRH) அணிகள் மோதின.
ஆட்டநாயகன் விருதை சதம் அடித்த சூர்யா குமார் யாதவ்
இந்த ஆட்டத்தில் மும்பை அணி டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில், 8 விக்கெட்களை இழந்து 173 ரன்களை குவித்தது. அடுத்து களமிறங்கிய மும்பை அணியில், தொடக்க ஆட்டகாரர் ரோஹித் ஷர்மா சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார்.
Rohit Sharma was crying in the dressing room ?? pic.twitter.com/R3dG5VWFIz
— Suhana (@suhana18_) May 6, 2024
பின்னர், களமிறங்கிய வீரர்கள் அதிரடியாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர். அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 102 ரன்களை குவித்தார்.
இறுதியில், மும்பை அணி 17.2 ஓவர்களில் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருதை சதம் அடித்த சூர்யா குமார் யாதவ் பெற்றுச் சென்றார்.
அதேவேளை கடந்த சில போட்டிகளில் தொடர்ந்து இதுபோல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறி இருந்தனர்.
இந்நிலையில் , ரோஹித் சர்மா மனமுடைந்து டிரஸ்ஸிங் அறையில் அழுது கொண்டிருந்தாரா? என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.